+100%-
  • எழுத்துக்கள்
  • Plus
  • Minus

உங்களுக்குத் தெரியுமா, அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காணாமற் போவார்கள்.

இது பலருக்கு எந்த விதமான அறிவித்தலுமின்றி நடைபெறலாம். பழக்கமானசூழல் திடீரென அவர்களுக்குப் புதிதாகத் தெரியும். அவர்களது வீட்டையே கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு இது கூடுதலாக நடந்தாலும் மற்றையவர்களுக்கும் கணிசமான எண்ணிக்கையில் நடைபெறுகிறது.

காணாமல் போவது கவலைக்குரியது மட்டுமின்றி ஆபத்தானதும்கூட. அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, 24 மணி நேரம் காணாமல் போனவர்களில் பாதிப் பேர் கடுமையாகக் காயமடைந்தோ இறந்தோ இருக்கிறார்கள்.

எனவே நாங்கள் குழப்பத்தில் இருப்பவர்களுக்கும் காணாமல் தென்படுபவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தவர்கள் தயாராக இருப்பதற்கும் உதவி செய்வது மிகவும் முக்கியம்.

அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

இந்நபர் சில நேரங்களில்:

  • காலநிலைக்கேற்றவாறு உடைகளை அணியாமல் இருப்பது
  • நீண்ட நேரம் அசையாமல் நின்று சுற்றிப் பார்ப்பது
  • அர்த்தமில்லாமல் நடப்பது
  • யார், எங்கு, நேரகாலம் தெரியாமல் குழப்பி இருப்பது
  • ஒரே கேள்வியைக் குறுகிய காலத்திற்குள் பல முறை திரும்பத்திரும்பக் கேட்பது

அவர்களோடு எப்படி உரையாட வேண்டும்

  • மெதுவாகவும் அமைதியாகவும் பேச வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவக்கு காது சரியாகக் கேட்காது என்று நினைத்து உரத்த குரலில் உரையாடுவது தவறு.
  • எளிமையான சொற்களை உபயோகியுங்கள்.
  • “ஆம்”, “இல்லை” என விடை கொடுக்கக்கூடிய கேள்விகளைக் கேளுங்கள்.
  • ஒரு கேள்வியை ஒருதரம் கேளுங்கள், பதில் அளிக்க நேரம் கொடுங்கள். தேவைப்பட்டால், நீங்கள் கேட்ட கேள்வியைத் திரும்பவும் கேளுங்கள்.
  • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கேள்வியின் ஒரு பகுதியை மட்டும் புரிந்து கொள்ளக் கூடும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்

  • அவர் காணக்கூடிய வகையில் கிட்டச் செல்லுங்கள்.
  • உங்களை அறிமுகப்படுத்துங்கள். அவரை எதற்காக அணுகினீர்கள் என்பதனைத் தெரியப்படுத்துங்கள்.
  • ஒரு அமைதியான சூழ்நிலையைப் பேணவும்.
  • மெதுவாகச் செல்லுங்கள். நேராக முகத்தை பார்த்து கதையுங்கள்.
  • பிரச்சனைகளை தவிர்க்கப் பாருங்கள்.
  • அவர்களின் தவறுகளைத் திருத்துவதைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பக் காவல்துறையினரை (911) அழையுங்கள்.
  • காவல்துறையினர் வரும் வரை அவருடன் காத்திருக்கவும்.

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வழி தடுமாறிய நிலையில் இருப்பதை நீங்கள் கண்டால்

  • உடலில் அணியும் நீலநிற MedicAlert® Safely Home® தாயத்து ஒன்று இருக்கின்றதா எனத் தேடிப் பாருங்கள்.
  • அந்த தாயத்தின் பின்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான தகவல்களை வாசியுங்கள்.
  • அவரை வீட்டுக்குக்குப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வதற்குத் தேவையான தகவல்களை வழங்கக்கூடிய பராமரிப்பாளர்கள் அல்லது குடும்பத்தவர்களை MedicAlert தொலைபேசி இயக்குநர் ஒருவர் விரைவாகத் தொடர்புகொள்வதற்காக, 24/7 மணிநேர MedicAlert® அவசரகால நிலை இணைப்பை (Hotline) அழையுங்கள்.

“காணாமல் போயிருக்கக்கூடிய அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் உள்ள ஒருவருடன் ஊடாடுதல்” பற்றி, எங்களுடைய நான்கு 15 நிமிட இணைய கற்கைத் தொகுதிகளில் ஒன்றிலிருந்து நீங்கள் மேலதிகமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய