+100%-
  • எழுத்துக்கள்
  • Plus
  • Minus

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதனுடன் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்ளல்

மூளையைப் பாதிக்கும் கோளாறுகளினால் உருவாகும் நோய் அறிகுறிகளின் தொகுதிக்கான பெயரே அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாகும். இந் நோய் ஒவ்வொருவரையும் வேறுபட்ட விதங்களில் பாதிக்கின்றது. இருந்தாலும், இந்நோயுள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு ஞாபகமறதி, முடிவெடுக்க முடியாமை, பகுத்தறிவு இழப்பு மற்றும் அவர்களின் மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படுகின்றன.

அல்ஸைமர் உட்பட அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்கள் மூன்று குணாதிசயங்களை கொண்டவை:

  • படிப்படியாக அதிகரிக்கும் நிலை (Progressive): மூளைக் கலங்கள் படிப்படியாக சேதமடைந்து இறுதியில் இறப்பதால் நோய்க்குறிகள் படிப்படியாக மோசமாகும்.
  • சிதையும் நிலை (Degenerative): நோயுள்ளவரின் மூளைக் கலங்கள் (நரம்புக்கலங்கள்) சிதைகின்றன அல்லது உடைந்து போகின்றன.
  • மீளூம் தன்மையற்ற நிலை (Irreversible): அல்ஸைமர் நோய் உள்ளடங்கலான அனேகமான அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுத்தப்படும் சேதம் சீர்செய்யப்பட முடியாதது.

எங்கள் அனைவரையும் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்கள் எப்படிப் பாதிக்கின்றன என்பது பற்றி அறிவதற்கு இந்த ஒளிநாடாவைப் பாருங்கள் – “அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் பற்றிய தரவுகள்” (“Dementia by the Numbers”)

“அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதனுடன் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்ளல்” பற்றி, எமது இணைய மூல கற்கை நெறிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அல்ஸைமருக்கும் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்க்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?
அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் என்ற சொல் ஒரு நோய் அறிகுறிகளின் தொகுதியை விபரிப்பதற்கு பாவிக்கப்படுகின்றது. ஞாபகமறதி, குழப்பம் மற்றும் மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள் உள்ளடங்கலாக, இதன் வேறுபட்ட வடிவங்களின் நோய்க்குறிகள் பெருமளவில் வேறுபடுகின்றன.

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் பல்வேறுபட்ட நோய்கள் காரணமாக ஏற்படலாம். இவற்றுள் அல்ஸைமர் தான் முக்கிய காரணியாகும். இந் நோயை ஏற்படுத்தும் ஏனைய நோய்களுள் மூளைக்கு குருதிவழங்கல் தடைப்படலால் வருவது (vascular dementia), அசாதாரண புரதத்தால் வருவது (dementia with Lewy bodies) மற்றும் முன்-பின் மூளையறைக் கோளங்களின் பாதிப்பால் வருவது (frontotemporal dementia) என்பன அடங்குகின்றன. சிலருக்கு இந் நோய் அல்ஸைமருடன் ஒன்றில் மூளைக்கு குருதிவழங்கல் தடைப்படலால் வரும் vascular dementia-வும் அல்லது அசாதாரண புரதத்தால் வரும் dementia with Lewy bodies-வும் இணைந்து பாதிப்பதினால் ஏற்படுகிறது எனக் கருதப்படுகின்றது. கலப்பு அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் என அழைக்கப்படுவதை நீங்கள் கேட்கக்கூடும்.
எனக்கு ஒரே மறதியாக இருக்கின்றது, எனக்கு அல்ஸைமர் வந்துவிட்டதா?
அடுத்தவர்களின் பெயர்களை அல்லது எங்களுடைய திறப்புகளை எங்கே வைத்தோம் என்பதை, எங்களில் பலர் தினம் தினம் மறக்கின்றோம். இது தினசரி வாழ்வின் ஒரு அம்சம். அல்ஸைமரின் அல்லது அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயின் ஒரு அறிகுறியாக இது இருக்க வேண்டுமென்பதில்லை. எப்போதாவது விடயங்களை மறப்பதிலும் பார்க்க ஞாபகசக்தி இழப்பு, அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயில் பாரதூரமானதாக இருக்கும் – இது, அன்றாட வாழ்வை இடையூறு செய்ய ஆரம்பிக்கும் ஞாபகசக்தி இழப்பாகும். மக்கள் மறதிக்காரர் ஆக வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மருந்துகள் ஞாபகசக்தியைப் பாதிக்கலாம். மனச் சோர்வு (Depression), பதட்டம், உயிர்ச்சத்துக் குறைபாடு கூட மறதிக்குக் காரணமாக இருக்கலாம், எனவே சரியான நோய்க் கண்டறிதலைப் பெற்றுக்கொள்வது முக்கியமாகும். உங்களுடைய ஞாபகசக்தியைப் பற்றி உங்களுக்குக் கவலையாக இருந்தால், உங்களுடைய குடும்ப வைத்தியருடன் உரையாடுவது நல்லது.
அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கான ஆபத்தை நான் எப்படிக் குறைக்கலாம்?
இதனைத் தடுப்பதற்கு நிச்சயமான வழி என எதுவுமில்லை, ஆனால் இதற்கான ஆபத்துக் காரணிகள் சில எங்களுக்குத் தெரியும். இவை மாற்றப்படலாம். இந்த ஆபத்துக் காரணிகள் இரத்தக் குழாய் நோய்க் (இதய நோய் மற்றும் பக்கவாதம்) காரணிகளை ஒத்தவையாக உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஒன்றைப் பின்பற்றுவதுடன், கிரமமான உடற்பயிற்சி செய்வதால், இந்தவகையான நோய்கள் ஏற்படுவற்கான அபாயத்தை நீங்கள் குறைப்பீர்கள், அத்துடன் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கான அபாயத்தையும்கூட அனேகமாக நீங்கள் குறைப்பீர்கள்.

ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு:
• புகைக்காதீர்கள்
• சுறுசுறுப்பாக இருங்கள். அத்துடன் கிரமமாக உடற்பயிற்சி செய்யுங்கள்
• ஆரோக்கியமான நிறையைப் பேணுங்கள்
• ஆரோக்கியமான சமநிலைப்படுத்தப்பட்ட உணவை உண்ணுங்கள்
• பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்குள் மட்டும் மதுபானம் குடியுங்கள்
• உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்
• கொலஸ்ரோலை ஆரோக்கியமான மட்டத்தில் வைத்திருங்கள்
என்னுடைய பெற்றோரில் ஒருவருக்கு அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் இருந்திருந்தால் நான் என்ன செய்வது?
இந் நோயுடன் தொடர்பான மாற்றங்களை அனைவரும் சரியாகக் கையாள்வதற்கு ஆதரவளிக்கும் கல்விபுகட்டும் வசதிகளுடன் முதல் இணைப்பு (First Link®) இந்த நோயுள்ளவர்களையும் அவர்களுடைய பராமரிப்பாளர்களையும் இணைக்கின்றது.

ஒன்ராறியோ முழுவதுமுள்ள அல்ஸைமர் அமைப்புகளினால் (Alzheimer Societies) வழங்கப்படும் முதல் இணைப்பு (First Link®) இந் நோய் உள்ளவர்களுக்கும் அவர்களுடைய பராமரிப்பாளர்களுக்கும் பின்வருவனவற்றில் உதவி செய்யும்:

• இந் நோயினையும் , எதனை எதிர்பார்க்கலாம் மற்றும் எப்படிக் கையாளலாம் என்பதையும் விளங்கிக்கொள்ளல்
• நோய்க்குறிகளைச் சமாளித்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றல்
• சுகாதார-மருத்துவ-வைத்திய பராமரிப்பு அமைப்பை விளங்கிக் கொள்வதுடன் உங்களுடைய சமூகத்திலுள்ள சேவைகள் மற்றும் வேறு வித ஆதரவுகளை அறிதல்
• அதே நிலைமையிலுள்ள ஏனையோருடன் தொடர்புகொள்ளல்
• அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ளவராயிருந்தாலென்ன அவர்களுடைய பராமரிப்பாளர்களாக இருந்தாலென்ன அவர்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கு தொடர்ந்து ஆதரவளித்தல்

குறிப்பிட்டதொரு அல்ஸைமர் அமைப்பின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள் www.AlzheimerOntario.ca