+100%-
 • எழுத்துக்கள்
 • Plus
 • Minus

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்ளல்

நீங்கள் உள நலிவுடன் வாழ்கிறீர்களாயின், அல்லது உள நலிவுடன் வாழும் ஒருவரைப் பராமரிக்கிறீர்களாயின், Finding Your Way இங்கு உதவக் காத்திருக்கிறது. இப்பக்கத்தில், உங்களுக்கு அல்லது நீங்கள் பராமரிப்பவருக்கு சமுதாயத்தில் பாதுகாப்பாக வாழ உதவும் பெறுமதியான வளங்களையும் தகவல்களையும் கண்டு கொள்வீர்கள். கீழ் வரும் பகுதியில், நாம் உள நலிவுடன் தொடர்பான இடர்ப்பாடுகளை அறிந்து கொள்ளல், அவ்விடர்ப்பாடுகளைக் குறைத்தல், ஒரு விபத்து நிகழுமாயின் ஒரு திட்டத்தைக் கொண்டிருத்தல் என்பவற்றைப் பற்றி உரையாடுவோம். எமது புதிய உள நலிவுடன் வாழ்தல் வள வழிகாட்டியானது தொடங்குவதற்கான ஒரு சிறந்த இடமாகும்.

வள வழிகாட்டியை ஆய்ந்தறிக!

உள நலிவுடன் வாழ்தல் பல்வேறு சவால்களை ஏற்படுத்தக்கூடிய அதே வேளை, உள நலிவுடன் வாழ்வோர் தமது அன்றாட வாழ்வில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய பல தகவல் துணுக்குகளும் உபாயங்களும் காணப்படுகின்றன

உள நலிவுடன் வாழ்வோருக்கு பாதுகாப்புத் தகவல் துணுக்குகளை ஒன்பது வெவ்வேறு தலைப்புக்களில் ஆய்ந்தறிய இணைந்தியங்கும் “உள நலிவுடன் பாதுகாப்பாக வாழ்தல் வள வழிகாட்டி”யை முயன்று பாருங்கள். மாறாக, நீங்கள் உள நலிவுடன் பாதுகாப்பாக வாழ்தல் வள வழிகாட்டி PDF ஐத் தரவிறக்குவதன் மூலம் அதே உள்ளடக்கத்தை அணுகலாம்!

ஆபத்துக்களை அறிந்திருத்தல்

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், நோய் ஆரம்பப் பருவத்தில் இருந்தாலும்கூட காணாமல் போகக்கூடிய ஆபத்துள்ளது. இந்த நோய் மற்றும் அதனுடன் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்வது, சமூகத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவி செய்யும்.

ஆபத்தைக் குறைத்தல்

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக வாழ்தல் என்பது அவர்களைச் சுறுசுறுப்பில்லாமல், ஆரோக்கியமற்ற நிலையில் வைத்திருப்பது என்று பொருள்படாது. இந் நோயுடன் வாழ்வதிலுள்ள ஆபத்துகளை, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைமுறையை அனுபவிப்பதுடன் எப்படிச் சமப்படுத்துவது என்பது பற்றி மேலும் அறியுங்கள்.

ஒரு திட்டமொன்றை வைத்திருங்கள்

நீங்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், நீங்கள் ஆதரவளிக்கும் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர் காணமல் போகக்கூடிய சந்தர்ப்பமுண்டு. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைக் குறைப்பதற்கு ஆலோசனைகள் இருக்கின்றன – அது எப்போது நடக்கும் என்பதை ஊகிப்பது எப்போதும் சாத்தியமானதல்ல, ஆனால் தயாராக இருப்பது பற்றி மேலும் அறியுங்கள்.

“சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்தல்” பற்றி, எங்களுடைய நான்கு 15 நிமிட இணைய கற்கைத் தொகுதிகளில் ஒன்றிலிருந்து நீங்கள் மேலதிகமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களும் சமூகத்தில் நன்கு வாழ்வதற்கு 3 வழிகள் உள்ளன:

1. வீட்டில் பாதுகாப்பாக இருத்தல்

வாழ்வு முறை ஏற்பாடுகளைக் கருத்தில் கொள்ளுங்கள் – நோயுள்ளவர் தனித்து வாழ்கின்றாரா, குடும்பத்துடன் வாழ்கின்றாரா அல்லது பங்காளி ஒருவருடன் வாழ்கின்றாரா?

வாழும் இடத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்:

 • தளர்வான விரிப்புகளை – கம்பளம் (rug) அகற்றுங்கள்
 • போதுமான வெளிச்சம் வழங்குங்கள்
 • குளிக்குமிடத்தில் (shower), குளிக்கும் தொட்டியில் (tub) மற்றும் மலசலகூடத்தில் கைகளினால் பற்றக்கூடிய கோல்களைப் பாவியுங்கள்
 • மாடிப்படிகளில் கைப்பிடிகளைப் (handrails) பாவியுங்கள்

உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்:

 • மருத்துவரைக் கிரமமாகச் சந்தியுங்கள்
 • பரிந்துரைக்கப்பட்டவாறு மருந்துகளை எடுங்கள்
 • ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யுங்கள்
 • உங்கள் மூக்குக் கண்ணாடி, செவிப்புலன் உபகரணம் போன்றவை சரியாகத் தொழிற்படுகின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
 • ஆரோக்கிய உணவுண்ணலைக் கடைப்பிடியுங்கள் (உ+ம். மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவு (Mediterranean)
2. சமூகத்தில் வேண்டிய இடங்களுக்குச் செல்லல்

தொலைந்து போதலுக்கான ஆபத்தைக் குறைத்தல்:

 • MedicAlert® Safely Home® தாயத்து ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்
 • நீங்கள் இருக்குமிடத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பக் கருவியொன்றை வைத்திருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் (உ+ம். கைத் தொலைபேசி, GPS கண்காணிப்பு)
 • அடையாள அட்டையை எப்போதும் எடுத்துச் செல்லுங்கள்
 • உங்கள் வழியைத் தெரிந்து கொள்க (Finding Your Way®) பத்திரத்தின் ‘அடையாளம் காணும் படிவத்தைப் பூர்த்தி செய்து வீட்டின் மையப்பகுதியில் வைத்திருக்கவும். (உதாரணமாக, வரவேற்பறை மேசை, குளிர்சாதனப்பெட்டியின் கதவு)
 • எங்கே நீங்கள் போகின்றீர்கள் என்பதை யாருக்காவது முன் கூட்டியே சொல்லுங்கள்
 • உங்களுடைய சுற்றாடல் பற்றி அறிந்திருங்கள்

விழுவதற்கான அல்லது காயப்படுவதற்கான ஆபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்:

 • வானிலையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப ஆடை அணியுங்கள் (உ+ம். பனி, காற்று, மழை, வெப்பம்)
 • நடைபாதைகள் மற்றும் வழித்தடங்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் (சமனற்றது, கரடுமுரடு, தடைகளுள்ளது)

போக்குவரத்துத் தெரிவுகளை ஆராயுங்கள்:

 • பொதுப் போக்குவரத்து (உ+ம். பேரூந்து)
 • சமூகப் போக்குவரத்து (உ+ம். தன்னார்வத்தொண்டாற்றும் சாரதிகள்)
 • டக்ஸி
3. உங்கள் சமூகத்தின் பகுதியாக இருத்தல்

சமூகரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்:

 • உங்களுடைய அயலவர்கள் பற்றி அறிந்திருங்கள்
 • நண்பர்களுடன் கோப்பி/ரீஅருந்த செல்லுங்கள்
 • நண்பர்களுடனும் குடும்பத்தவர்களுடனும் இரவுணவு உண்ணுங்கள்

நாளாந்தச் செயற்பாடுகளில் களிப்படையுங்கள்:

 • உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள் (உ+ம். நடத்தல், விளையாடல், வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்லல், பொழுதுபோக்கு – hobby – ஒன்றைத் தக்கவைத்துக்கொள்ளல்)

பிறர் தரும் ஆதரவைப் பெறுவதற்குத் தயாராக இருத்தல்:

 • நண்பர்கள், குடும்பத்தவர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களிடன் உதவி கேளுங்கள்
 • நீங்கள் சந்திக்கும் நிபுணர்கள் பற்றி அறிந்துவைத்திருங்கள் (உ+ம். மருந்தாளர், வங்கி அலுவலகர், மளிகைக் கடைக்காரர், உணவக உரிமையாளர்)
 • உள்ளூர் அல்ஸைமர் அமைப்புடன் தொடர்பு வைத்திருங்கள்